மாணவியை நிர்வாணமாக்கிய கராத்தே மாஸ்டர்

ad+1

காலி, பத்­தே­கம பிர­தே­சத்தில் கராத்தே பயிற்­சி­க­ளுக்­காக வந்­தி­ருந்த மாணவி ஒரு­வரை நிர்­வா­ண­மாக்கி, அவரைத் துஷ்­பி­ர­யோகம் செய்ய முயற்­சித்த கராத்தே பயிற்­று­விப்­பாளரொரு­வரை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.


சந்­தேக நபர் தன்­னிடம் கராத்தே பயின்­று­வந்த 12 வய­தான மாண­வி­யொ­ரு­வரை, பயிற்சி வகுப்­புகள் இல்­லாத நாளொன்றில் அழைப்­பித்து, அவ­ருக்கு விசேட பயிற்­சி­த­ரு­வ­தாக கூறி­ய­துடன், அதற்­காக நிர்­வா­ண­மாக வேண்டும் என மாண­வியின் உடை­களை களைந்து அவரை துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்த முயற்­சித்­துள்ளார்.

அத­னை­ய­டுத்து, இது விட­ய­மாக எவ­ரி­ட­மா­வது கூறினால் கொலை செய்­து­வி­டு­வ­தாக கராத்தே பயிற்­று­விப்­பாளர் மாண­வியை மிரட்­டி­யுள்ளார்.

அவ­ரது மிரட்­ட­லுக்கு பயந்த மாணவி அது தொடர்பில் யாரி­டமும் தெரி­விக்­காமல் தனது நாட்­கு­றிப்பில் தான் முகங்­கொ­டுத்த சம்­பவம் தொடர்பில் குறிப்­பொன்றை எழுதி வைத்­துள்ளார்.

தற்­செ­ய­லாக ‍இச்­சி­று­மியின் தாய் அந்­நாட்­கு­றிப்பில் எழு­தப்­பட்­டி­ருந்த குறிப்பை வாசித்து அது தொடர்பில் மாண­வி­யிடம் வின­வி­யுள்ளார். அதன்­போதே அச்­சி­றுமி தான் முகங்­கொ­டுத்த சம்­ப­வத்தை தாயிடம் தெரி­வித்­துள்ளார்.

பின்னர் பத்­தே­கம பொலிஸ் நிலை­யத்தில் குறித்த கராத்தே பயிற்­று­ந­ருக்கு எதி­ராக முறைப்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த நிலையில், சந்தேக நபர் நேற்றைய தினம் சட்டத்தர ணியொருவரின் மூலமாக பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.0 comments: