மட்டக்களப்பில் கோர விபத்து!! இளைஞன் பரிதாப மரணம்!!

ad+1

வாழைச்சேனை – பாசிக்குடா பிரதான வீதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 18 வயது இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.பாசிக்குடா பிரதேசத்தில் இருந்து, வாழைச்சேனை நோக்கி பயணித்த இரு மோட்டார் சைக்கிள்களில் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் வலப் பக்கமாக திரும்புவதற்கு முற்பட்ட வேளையில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இதில், கிண்ணையடி – நாகதம்பிரான் ஆலய வீதியைச் சேர்ந்த செல்வக்குமார் புவிதன் (வயது 18) என்பவர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த இருவரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


0 comments: