கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் தான் அதிக மதுபானசாலைகள்

ad+1

கிழக்கு மாகாணத்தில் இருக்க வேண்டிய மொத்த மதுபான சாலைகளில் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகளவில் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
எதிர்காலத்தில் இன்னும் பல மதுபானசாலைகள் திறக்கப்படவுள்ளன என்ற அச்சம் தனக்கு உள்ளதாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்ற ‘நாம் போதையற்ற இளைஞர்கள்’ என்ற தொனிப்பொருளில் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த அச்சத்தை வௌியிட்டார்.
மட்டக்களப்பு மாவட்டம் போதையால் அழிந்து விடுமோ என்ற அச்சம் எங்கள் மத்தியில் காணப்படுகின்றது.
ஏனெனில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிலும் குறிப்பாக கல்குடாத் தொகுதியில் எதனோல் தொழிற்சாலை அமைய இருப்பது மட்டக்களப்பு மாவட்டத்தை போதைக்கு உகந்த இடமாக தெரிவு செய்திருப்பது கவலையான விடயமாக உள்ளது.
எங்களால் இதனை தடுக்க முடியும் என்ற விடயத்தை மாத்திரம் தான் செய்யலாம்.
சட்டத்திற்குள் உள்ள ஓட்டைகளை வைத்துக் கொண்டு இவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

0 comments: