யாழ், ஆலயங்களில் மிருக பலி முற்றாக தடை: மேல் நீதிமன்று தீர்ப்பு!

ad+1

யாழ் மேல் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட இந்து ஆலயங்களில் மிருகங்கள் பலியிடப்படுவதினை முற்றாக தடை விதித்து யாழ் நீதி மன்று இன்று தீர்ப்பளித்துள்ளது.

யாழ் குடாநாட்டு கோவில்கள் சிலவற்றில் விலங்குகளை பலியிட்டு வேள்வி நடத்துவதற்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி (2016-04-01) இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

ஆலயங்களில் விலங்குகளைப் பலிகொடுத்து நடத்தப்படும் வேள்விகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி அகில இலங்கை சைவ மகா சபை தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையின் போதே இந்த உத்தரவை நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் யாழ் குடாநாட்டின் ஆலயங்கள் சிலவற்றில் மிருகபலி கொடுத்து நடத்தப்படும் வேள்வியை உடனடியாகத் தடுத்து நிறுத்தும் வகையில் இன்று யாழ் மேல்நீதிமன்றத்தால் முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

0 comments: