மட்டு. மாவட்ட சமுர்த்தி அலுவலர்களுக்கான செயற்திறன் விருத்திப் பயிற்சி

ad+1

மட்டக்களப்பு மாவட்ட செயலக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு
செயற்திறன் விருத்தி தொடர்பிலான  இறுதிநாள் பயிற்சி  மட்டக்களப்பு மாவட்ட செயலக  மாநாட்டு மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை 22ஆம் திகதி நடைபெற்றது.


மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும், பிரதேச செயலகத்தின் கீழுள்ள சமுர்த்தி தலைமை அலுவலகம், சமுர்த்தி வங்கி ஆகியவற்றிலிருந்து தொரிவுசெய்யப்பட்ட சுமார் 120 பேருக்கு சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் இப் பயிற்சி நடாத்தப்பட்டது.


இதன்போது உத்தியோகத்தர்களின் செயற்திறன் விருத்தி மற்றும் அலுவலக முகாமைத்துவம், உத்பத்தித் திறன்  தொடப்பிலான பயிற்சிகளும் விளக்கமளிப்புகளும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் வளவாளர்களாக மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் பி.குணரெட்ணம், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் ஜே.எவ்.மனோகிதராஜ், முகாமைத்துவப் பணிப்பாளர் பஷீர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


0 comments: