மதன லேகியங்களுடன் குடும்பஸ்தர் கைது

ad+1

( யாசீம் )
கிண்ணியா, புஹாரியடி நாற் சந்தியில் போதை தரும் மதனமோகன லேகிய விற்பனையின் ஈடுபட்ட 45 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர், புதன்கிழமை(18) காலை 10 மணியளவில் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுப் பொலிஸ் தெரிவித்தனர்.
குறித்த நபரிடமிருந்து 250 கிராம் கொண்ட 25 லேகியங்கள் கைப்பற்றப்பட்டுள்ள​னவென, பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரையும், லேகியங்களையும் மேலதிக நடவடிக்கைகளுக்காக கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஜனோஸன் தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதி விசாரணைகளை, கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments: