சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையும் சகோதரத்துவமும் அவசியம்! - ஆயர் ஜோசப் பொன்னையா

ad+1

(எம்.நூர்தீன்)
சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையும் சகோதரத்துவமும் கட்டி எழுப்பப்படல் வேண்டும் என, மட்டக்களப்பு மறைமாவடட ஆயர் அருட்கலாநிதி ஜோசப் பொன்னையா தெரிவித்தார்.

49ஆவது வருடமாக மட்டக்களப்பு மைக்கேல்மென் விளையாட்டுக் கழகம் நடாத்திய, வெபர் கிண்ணத்துக்கான கூடைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியினை வெள்ளிக்கிழமை  ஆரம்பித்து வைத்து, உரையாற்றுகையிலேயே ஆயர் இதைத் தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாம் சமய, சமூகங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் இதனை மைக்கேல்மென் விளையாட்டுக் கழகம சிறப்பாக செய்து வருகின்றது. இந்த ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்காட்டாக இந்தக் கழகம் திகழ்கின்றது. இவ்வாறான விளையாட்டுக்களினூடாக சமூக ஐக்கியமும் ஒற்றுமையும் வளர்க்கப்படுகின்றது என்றார்.

இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜெயக்கொட ஆராச்சி, புனித மிக்கேல் கல்லூரியின் அதிபர் பயஸ் ஆனந்தராஜா மற்றும் கல்லூரியின் அபிவிருத்திக்குழு தலைவர் ஜெகநாதன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

0 comments: