தாய் குழந்தைகள் உட்பட நால்வர் சடலங்களாக மீட்பு

ad+1

யாழ். அரியாலை மாம்பழச்சந்தி பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர், நேற்று பிற்பகல் (27ம் திகதி) சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
தாய் உட்பட மூன்று பிள்ளைகளே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

பிள்ளைகளின் தந்தை ஒரு மாதத்துக்கு முன்னரே தற்கொலை செய்து கொண்ட நிலையில், தாய், தனது மகள், இரண்டு மகன்களுடன் தனியே வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய பிள்ளைகளுக்கு விசத்தை கொடுத்த அத்தாய், தானும் விசமருந்தி தற்கொலைச் செய்து கொண்டதாக அறியமுடிகிறது.

கடன் சுமை காரணமாகவே இவ்வாறு, அத்தாய் முடிவெடுத்துள்ளதாகவும் அறியகிடைகிறது.

அயலவர்கள் வழங்கிய தகவலுக்கமையவே பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகைத்தந்து, விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


0 comments: