மண்முனைப்பற்று பிரதேச சபையை நகர சபையாக மாற்றுமாறு கோரிக்கை

ad+1

மண்முனைப்பற்று பிரதேச சபை, நகர சபையாக தரமுயர்த்தப்பட வேண்டுமென, உள்ளூராட்சி அமைச்சர் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களைத் தரம் உயர்த்துதல் மற்றும் ஸ்தாபித்தல் ஆணைக்குழு தலைவருக்கு கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் பூ.பிரசாந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.அவர் விடுத்துள்ள கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“மட்டக்களப்பு மாவட்டத்தின் மத்திய பகுதியாக விளங்கும் மிகவும் பூர்வீகமான வரலாறு கொண்ட மண்முனைப்பற்று பிரதேச சபை நகர சபையாக தரம் உயர்த்தப்பட வேண்டும்.

“2012ஆம் ஆண்டு, கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த சி.சந்திரகாந்தன் ஊடாகவும், அதன் பின்னர் 2014ஆம் ஆண்டு எல்லை நிர்ணயத்தின் போதும் எம்மால் மண்முனைப்பற்று பிரதேச சபையை நகரசபையாக தரம் உயர்த்துவதற்கான கோரிக்கைகளும் திட்ட அறிக்கைகளும் முன்வைக்கப்பட்டிருந்தது.

“இருப்பினும், இம்முறை தங்களால் பத்திரிகை விளம்பரப்படுத்தலில் மண்முனைப்பற்று பிரதேச சபையின் விவரங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

“27 கிராம சேவையாளர் 10473 குடும்பங்கள், 34,998 சனத்தொகையைக் கொண்டு நகரசபையாக  தரம் உயர்த்துவதற்குரிய அனைத்து தகைமைகளும் காணப்படுவதன் காரணத்தால் நகர சபையாக்க ஆவண செய்வும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


0 comments: