மத்தியஸ்த சபை உறுப்பினர்களை தெரிவுசெய்யும் நேர்முகப் பரீட்சை

ad+1

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் மத்தியஸ்த சபை உறுப்பினர்களை தொரிவுசெய்யும் பொருட்டு இடம் பெற்ற நேர்முகப் பரீட்சை திங்கட்கிழமை 23ஆம் திகதி பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.நீதியமைச்சின் கீழ் செயற்படும் மத்தியஸ்த சபை ஆணைக்குழுவினால் மேற்படி மத்தியஸ்த சபை உறுப்பினர்களை நியமிக்கும் வண்ணம் இவ் நேர்முகப் பரீட்சை இடம்பெற்றதுடன் இதற்கென இப் பிரதேசத்திலுள்ள சுமார் 40 பேர் பங்குபற்றினர்.

இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, மத்தியஸ்த சபை ஆணைக்குழுவின் பயிற்சி அலுவலர் யூ.ஐ.எம்.ஆஸாத், பிரதச செயலக நிருவாக உத்தியோகத்தர் ஜெ.ஜெயந்திரன், மத்தியஸ்த சபை ஆணைக்கு முகாமைத்துவ உதவியாளர் ஏ.றம்யா போன்றோர் கலந்துகொண்டனர்.

மேற்படி மண்முனை மேற்கு பிரதேச மத்தியஸ்த சபை உறுப்பினர்களின் பதவிக் காலம் கடந்த 2016 டிசம்பர் மாதம் முடிவுற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.0 comments: