போலி பேஸ்புக் விவரிதம்; 8 பேருக்கு மறியல்

ad+1

மட்டக்களப்பு, புதிய காத்தான்குடியில் போலி முகநூல் பக்கத்தால் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இரு குழுக்களிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட 8 பேரையும், எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா, இன்று (17) உத்தரவிட்டார்.
இந்த மோதல் சம்பவத்தில் காயமடைந்த ஏழு பேர், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அப்பகுதியில் இடம்பெற்ற திருமணத்தில் மாப்பிள்ளையொருவர் சீதனம் பெற்றதாகக் கூறி, அவரை விமர்சித்து போலியான பேஸ்புக் பக்கமொன்று உலாவியமையே, இந்தக் குழு மோதலுக்குக் காரணமென, விசாரணைகளில் தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments: