செல்பி மோகத்தால் 8மாதத்தில் 24பேர் மரணம்

ad+1

இந்த வருடத்தில் கடந்த 8 மாத காலப்பகுதியில் ரயில் மற்றும் ரயில் நிலையங்களிலிருந்து செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டவர்களில் 24 இளைஞர், யுவதிகள் உயிரிழந்திருப்பதாக வீதிப்பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.
வருடாந்தம் ரயிலில் இடம்பெறும் விபத்து சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. 2016ஆம் ஆண்டில் ரயில் பாதையில் சென்றதினால் ரயிலில் மோதுண்ட 436 பேரில் 180 பேர் உயிரிழந்துள்ளனர். 256 பேர் காயங்களுக்கு உள்ளானார்கள்.

ரயில் குறுக்கு பாதைகளில் வாகனங்களுடன் ரயில் மோதியதினால் 84 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ரயிலில் பயணிக்கும் போது குடிபோதையில் தவறிவிழுந்த 76பேர் கடந்தவருடம் உயிரிழந்துள்ளனர்.

0 comments: