23 மாடிக்கட்டட உயரமுடைய 333 மீற்றர் நீளமுடைய தாக்குதல் கப்பற்படையணி இலங்கையில்

ad+1

இத்தாக்குதல் கப்பற்படையணியில் யு.எஸ்.எஸ் நிமிட்ஸ், வேக யுத ;தக் கப்பலான யு.எஸ்.எஸ் பிரின்ஸ்டன், நாசகாரிக் கப்பல்களான யு.எஸ்.எஸ் ஹவார்ட், யு.எஸ்.எஸ் ஷுப், யு.எஸ்.எஸ் பிங்க்னே, மற்றும் யு.எஸ்.எஸ் கிட் ஆகியன இடம்பெறும். இக் கப்பல்கள், 2017 ஒக்டோபர் 31ம் திகதி கொழும்பிலிருந்து புறப்படத்திட்டமிடப்பட்டு உள்ளது.
இலங்கை மற்றும் அமெரிக்க கடற்படையினருக்கு இடையில் மேம ;பட்டு வரும் நல்லுறவின் பிரதிபலிப்பாக, கடந்த 1985ம் ஆண ;டின் பின் முதன்முறையாக விமானந்தாங்கிக் கப்பல் ஒன ;று இலங்கைக்கு வருகை தரவுள்ளது. அண்மையில் நிறைவடைந்த மிதக்கும் தயார்நிலை மற ;றும் பயிற ;சிக்கான கூட்டுறவு  என்ற இருதரப்பு கடற்படை ஆரம ;பப் பயிற ;சிகளைத் தொடர்ந்து இவ்விஜயம் அமையவுள்ளது. 'இலங்கையின் சுயமான நல்லிணக்க முயற்சிகள் மற்றும் மனித உரிமைச் செயற்பாடுகள் முன்னேறும் இக்கட ;டத்தில், எமது கடல்சார்ந்த நல்லுறவைக் கட்டியெழுப்புவது மூலம் இரு நாடுகளுக்கும் பொதுவான குறிக்கோள்களான பாதுகாப்பு மற ;றும் ஸ்தீரத்தன்மை ஆகியன மேம்படும்' என இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேஷப ; குறிப்பிட்டார்.

'இலங்கைக்கு வர அமெரிக்க கடற்படையினருக்கு வாய்ப்புக் கிடைத்தமை பற்றி நான் மகிழ ;ச்சி அடைவதுடன், அற்புதமான மக ;களைச் சந்திக்கவும், பாடசாலை, வைத்தியசாலை, ஓய்வு இல்லங்களில் நடைபெறும் பொதுப்பணிகளில் ஈடுபடுவது மூலம், சிறுவர் முதல் முதியோh ; வரை அனைவரது வாழ ;க்கைத் தரத்தையும் மேம்படுத்த முடியும்' எனவும் அவர் தெரிவித்தார்.

இவ் விமானந்தாங ;கி தாக்குதல் படையணியின் விஜயத ;தின் போது, விநியோகப் பண ;டங்கள் கொள்வனவு மற ;றும் ஆயிரக்கணக்கான அமெரிக்கப்படையினர் உள்ளுர் வியாபாரிகளுக்கு உதவுவது மூலம ;, இலங்கை வர்த்தகத்தில் ஏறத்தாள ரூ. 1.54 ட்ரில்லியன் (10 மில்லியன ; அமெரிக்க டொலர்கள்) வருமானம் ஏற ;படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விஜயத ;தின் போது அமெரிக்கப் படையினர் உள்ளுர் சமூகத்தைத ; தெரிந்து கொள்வதுடன், இலங்கைக் கடற்படையினரையும் சந்திப்பர். துறைமுகத்தில் தரித ;து நிற்கும் வேளையில் அமெரிக்கக் கடற்படையினர் உள்ளுர் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து வைத்தியசாலை, அனாதை இல்லங்கள், மற்றும் பல இடங்களில் சமூக சேவைப் பணிகளில் உதவி செய்வர். 'கொழும்பில் பெற ;றக்கொள்ளவுள்ள அனுபவத்தை எதிர்நோக்கி எமது குழுவினா் ஆர்வமாக உள்ளனர்' என தாக்குதல் படையணி 11இன் கட்டளைத ;தளபதி ரியர் அட்மிரல் கிறகறி ஹரிஸ் அவர்கள் குறிப்பிட்டார்.

 'எமது படையினரில் சிலா் மட்டுமே முன்னர் இலங்கைக்கு வந்துள்ளதால் ஒரு சாகச மற்றும் எதிர்பார்ப்பு உணர்வு மேலோங்கி உள்ளது. எமது விஜயம ; மூலம் இலங்கையுடனான கலாச்சார மற்றும் ஏனைய பரிமாற ;றங ;கள் மேம்படுவதுடன், நாம் புறப்பட்ட பின்பும் இவ்வுறவுகள் நீடித ;து நிலைக்கும் என நம்புகிறேன்' எனத் தெரிவித தார். யு.எஸ்.எஸ் நிமிட்ஸ் விமாந்தாங ;கிக் கப்பல் அடியில் இருந்து பாய்மர நுனிவரை 23 மாடிக்கட்டட உயரமுடையதுடன் 333 மீற்றர் நீளமானது.

இக்கப்பலில் 5,000 பேருக்கு மேல் பயணிக்க முடிவதுடன், கப்பல் சமையலறைகளில் ஒரு நாளில் 18,000 பேருக்கான உணவு சமைகக முடியும். ஒரு நாளில் 1.5 மில்லியன் நன்னீரை உற்பத ;தி செய்வதுடன், ஒரு வாரத்தில் 1,500 பேருக்கு முடிதிருத்தம் செய்யக்கூடிய இரு முடி திருத்தகங்களும் உள்ளன. யு.எஸ்.எஸ் நிமிட்ஸின ; தாய்த் துறைமுகம்வொஷிங்டன் மாநிலததில் அமைந்துள்ளது.0 comments: