சிறுவனை வல்லுறவுக்குட்படுத்திய பெண்ணுக்கு 21 வருட கடூழிய சிறை

ad+1

கெகிராவ மருதங்கடவல பகுதியில் 15 வயது  சிறுவனை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய பெண் ஒருவருக்கு  அநுராதபுரம் மேல் நீதிமன்றம் 21 வருட  கடூழியச் சிறை தண்ட​னை விதித்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு எதிராக மூன்று குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யபட்டிருந்தன.

இதற்கமைய வழக்கு நேற்று (30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போ​து, குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து நீதவான் மகேஸ் வீரமன் இவ்வாறு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

 ஒரு குற்றத்திற்கு 7 வருடங்கள்படி மூன்று குற்றங்களுக்கு 21 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கெகிராவ மரதன்கடவல பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான பெண்ணொருவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறுவன் ஒருவனை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்திற்கு பெண்ணொருவருக்கு 21 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கபப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.0 comments: