161 யானைகள் உயிரிழப்பு

ad+1

கிழக்கு  மற்றும் வடமேல்  ஆகிய மாவட்டங்களில் கடந்த 10 மாதங்களில் 161 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.அம்பாறை, திருகோணமலை, குருநாகல் ,பொலன்னருவை, ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட  கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்த வருடத்தின் ஜனவரி தொடக்கம் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் 161 யானைகள் இவ்வாறு எதிர்பாராத விதத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலன்னருவை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் மாத்திரம் 65 காட்டு யானைகள் கடந்த 10 மாதங்களில் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்படும் அதேவேளை,அம்பாறை மாவட்டத்தில் 53 யானைகளும், குருநாகல், அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் 43 யானைகளும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் ​திணைக்களம் தெரிவித்துள்ளது.

வாகன விபத்துகள், மின்னல் தாக்கம், வெடி வைத்தல், ஆகிய காரணங்களாலும், புகையிரத்தில் மோதுண்டும் யானைகள் இத்தகைய ஆபத்தினை எதிர்நோக்கியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.0 comments: