அம்பாறையில் பேருந்து விபத்து; 12 மாணவர்கள் வைத்தியசாலையில்!

ad+1

அம்பாறையில் பேருந்து ஒன்று ஓடையில் விழுந்து விபத்துக்குள்ளானதில், பதினான்கு பேர் காயமடைந்ததுடன் மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


காயமடைந்தவர்களுள் பன்னிரண்டு பேர் பாடசாலை மாணவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
வேகமாக வந்த பேருந்து, உகன - அம்பாறை வீதியில் வைத்துத் திரும்பும்போதே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் சென்ட்ரல் கேம்ப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஏழு மாணவர்கள் உட்பட ஒன்பது பேர், மேலதிக சிகிச்சைகளுக்காக அம்பாறை அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0 comments: