Latest Posts

திருமணம் முடிந்த கொஞ்ச நாளிலேயே இத்தனை மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்தியுள்ளார் பாருங்க பரியங்கா

No comments:
ப்ரியங்கா சோப்ரா இந்திய சினிமா தாண்டி ஹாலிவுட் வரை சென்று கலக்க ஆரம்பித்துவிட்டார். இவர் நிக்கி ஜோன்ஸ் என்ற ஹாலிவுட் கலைஞரை திருமணம் செய்துக்கொண்டார்.

அவர் இவரை விட மிகவும் வயது குறைந்தவர் என்பது பலருக்கும் தெரிந்த தகவல் தான்.

இந்த நிலையில் ப்ரியங்கா சோப்ரா எப்போதும் ஹாட் போட்டோஷுட் நடத்துவது வழக்கம் தான், அப்படி சமீபத்தில் ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார்.

அதில் அவர் மிகவும் மோசமாக கவர்ச்சி உடையணிய, பலரும் இவருக்கு எதிராக கமெண்ட் அடித்து வருகின்றனர்,Read More

இந்திய அளவில் டாப்10 லிஸ்டில் விஜய் - வேறு எந்த தமிழ் நடிகரும் இல்லை

No comments:
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் நடிகர் விஜய். அவரது சமீபத்திய படங்கள் அனைத்தும் சர்ச்சைகளில் சிக்குவதால் அவரை பற்றிய பேச்சு சமூக வலைத்தளங்களில் தேசிய அளவில் அதிகம் இருக்கும்.

இந்நிலையில் ட்விட்டர் இந்தியா நிறுவனம் இந்த வருடத்தில் அதிகம் பேசப்பட்ட டாப் 10 ட்விட்டர் கணக்குகள் பற்றி அறிவிப்பு செய்துள்ளது.
அதில் விஜய் 8வது இடம் பிடித்துள்ளார். முதல் 5 இடங்களில் அரசியல் தலைவர்கள் இருக்க, 6 வது இடத்தில் பவன் கல்யாண் மற்றும் 7வது இடத்தில் ஷாருக்கான் உள்ளனர்.

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை விட விஜய் முன்னணியில் உள்ளார்.


Read More

'மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்'

No comments:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வாதிகாரப் போக்கு, விரைவில் அடங்குமென, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நேற்று புதன்கிழமை (05)  மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Read More

கோவில் உண்டியலுடன் வெருகல் பிரதேசத்திலிருந்து வந்து தங்கியிருந்தவர் கைது

No comments:
ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் உள்ள தளவாய்  பிரதேசத்தில் திங்கட்கிழமை இரவு (12) அங்குள்ள பத்தினி அம்மன் கோவில் ஒன்றின் உண்டியலை திருடிக் கொண்டு சென்ற நபரை, சற்று நேரத்தில் துரத்திச் சென்று கைது செய்திருப்பதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

மருதமுனை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 17 பேர் கைது

No comments:
முஸ்லிம் பிரதேசங்களில் இடம்பெற்றுவரும் இனவாதச் செயல்களை கண்டித்து செவ்வாய்க்கிழமை (06) மருதமுனையில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டதுடன் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
Read More

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கட்சித் தலைமைக் காரியாலயத்தில் குண்டுகள் வெடிப்பு 9 குண்டுகள் வெடிக்கும் முன்னர் மீட்பு

No comments:
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவு புதிய காத்தான்குடி பிரதேசத்திலுள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமை அலுவலகத்தின் மீது திங்கட்கிழமை அதிகாலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


Read More

மட்டக்களப்பு மாநகர சபைத் தேர்தலில் ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதன் அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றி

No comments:
நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், மட்டக்களப்பு மாநகர சபையின் அரசடி 10ஆம் வட்டாரத்தில் தமிழ்த் தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஊடகவியலாளரும் சமூக சேவகருமான சிவம் பாக்கியநாதன் மாநகர சபைப் பிரிவில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அளிக்கப்பட்ட வாக்குகளில் இவருக்கு 1333 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

Read More

விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் மட்டக்களப்பில் நடைபெற்ற வாக்களிப்புக்கள்

No comments:
மட்டக்களப்பு மாவட்டத்தில்   உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 380327பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்,  இதற்கென 457 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு காலை 7மணி தொடக்கம் வாக்களிப்புக்கள் சுமூகமாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகர சபை பிரிவிலும் இவ் வாக்களிப்பு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் நடைபெற்றது.


Read More

வாக்குகளைப் பெறுவதற்கு மதுபானம் வழங்குவதாக குற்றச்சாட்டு

No comments:
வாழைச்சேனையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் வாக்குகளைப் பெறுவதற்கு மதுபான போத்தல்களை வழங்குவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் குற்றஞ்சாட்டினார்.

வாழைச்சேனை, புதுக்குடியிருப்பு வாணி வித்தியாலயத்தில் தனது வாக்கை அளித்து விட்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Read More

கணவர்கள் இல்லா நேரத்தில் 8 மனைவியர் போட்ட ஆட்டம்

No comments:
வெலிகம, ரிலாகமவில் சூதாட்டத்தில் ஈடுபட்ட எட்டுப் பெண்களை பொலிஸார் கைது செய்தனர்.


Read More

கழுத்தை அறுப்பதாக மிரட்டிய பிரிகேடியர் குறித்து இராணுவத்தளபதியின் அதிரடி அறிவிப்பு

No comments:
லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக எவ்வித விசாரணைகளையும் முன்னெடுக்கப்போவதில்லை என இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்னால் இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களை நோக்கி கழுத்தை அறுக்கப்போவதாக, லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பொர்னாண்டோ சைகை மூலம் வெளிப்படுத்தியிருந்தார்.


Read More

வேட்பாளரின் மோட்டார் சைக்கிள் திருட்டு

No comments:
தேர்தல் பரப்புரைக்காக, வீடுகளுக்குச் சென்ற வேட்பாளரின் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டு உள்ளது.

சாவகச்சேரி பிரதேச சபையின் கைதடி தெற்கு வட்டாரத்தில் போட்டியிடும் செல்லையா ஜெயபாலன் என்பவர், கடந்த வாரம் கைதடி தெற்கில் தான் போட்டியிடும் வட்டாரத்தில் உள்ள வீடுகளுக்கு தேர்தல் பரப்புரைக்காக சென்றிருந்தபோது, வட்டார எல்லையில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, கால்நடையாக ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று வாக்குக் கோரி பரப்புரைச் செய்துள்ளார்.

பின்னர் மீண்டும் மோட்டார் சைக்கிள் நிறுத்திய இடத்துக்கு திரும்பி வந்து பார்த்தபோது, அவ்விடத்தில் மோட்டார் சைக்கிளை காணவில்லை.

இது தொடர்பில், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.Read More

ரூ. 30 மில். பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்பு

No comments:
வல்வெட்டித்துறை - மயிலியதனை கடற்கரைப் பகுதியில் உள்ள பற்றைக்காட்டினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள், நேற்று (06) மீட்கப்பட்டன என, கடற்படையினர் தெரிவித்தனர்.

வல்வெட்டித்துறை - ஆதி கோவிலடியைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்கு, பெருமளவான போதைப்பொருட்கள் கடல் வழியாகக் கொண்டு வரப்பட்டு, அவை கடற்கரையை அண்மித்த பற்றைக்காட்டினுள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன என, கடற்படையினரின் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், அப்பகுதியில் நேற்று முன்தினம் காலை தேடுதல் நடத்தப்பட்டது.

இதன்போது, மறைத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில், 88 கிலோகிராம் கேரள கஞ்சா, 4 கிலோகிராம் அபின், 4 கிலோகிராம் ஹசஸ் ஆகிய போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட போதைப் பொருட்களின் பெறுமதி, சுமார் 30 மில்லியன் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.


Read More

மாலபே சைட்டம் மருத்துகக் கல்லூரியின் பெயரை மாற்றும் செயல் சிறுபிள்ளைத்தனமானது! - பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவிப்பு

No comments:
மாலபே சைட்டம் மருத்துகக் கல்லூரியின் பெயரை மாற்றும் செயல் சிறுபிள்ளைத்தனமானது! - பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவிப்பு


'மருத்துவப் படிப்பபை பணத்துக்கு விற்பனை செய்தால், பணம் படைத்தவர்களுக்கு வழங்கும் சலுகையாகவே அமையும். ஏழைகளைக் காப்பற்றுவதற்கும் எமது பெற்றோர், மாணவர்களைக்  காப்பாற்றுவதற்கும் சைட்டத்தை உடனடியாக தடை செய்யுங்கள்' என கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போத தெரிவித்தனர்.

மாலபே சைட்டம் தனியார் மருத்துகக் கல்லூரியின் பெயரை மாற்றம் செய்வதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளைக் கண்டித்தும், சைட்டத்தை உடனடியாக மூடிவிட வேண்டுமெனக் கோரியும், கிழக்குப் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாகத்தின் முன்னால் பிரதான வீதியோரம் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோதே மாணவர்கள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தனர்.

(படம் - சபேஷ்)


Read More